Loading...
இந்தோனேசியா விமான நிலையங்கள் திறப்பு: அனக் கிரக்கடோவா எரிமலை சாம்பல் குறைந்ததால் சேவை சீரமைப்பு
இந்தோனேசியாவில் விமான நிலையங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளன

இந்தோனேசியா விமான நிலையங்கள் திறப்பு: அனக் கிரக்கடோவா எரிமலை சாம்பல் குறைந்ததால் சேவை சீரமைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 08, 2026
07:38 am

செய்தி முன்னோட்டம்

இந்தோனேசியாவில் அனக் கிரக்கடோவா எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சாம்பல் புகை காரணமாக மூடப்பட்டிருந்த தலைநகர் ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளன. விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சிக்கல்கள் குறைந்ததை தொடர்ந்து பயணிகள் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து வருகிறது. அனக் கிரக்கடோவா எரிமலை கடந்த வார இறுதியில் வெடித்து, லாவா குழம்புகளையும் சாம்பல் புகையையும் வளிமண்டலத்தில் கணிசமாகப் பரப்பியது. இதனால் வான்வெளியில் சாம்பல் படிந்ததால், பாதுகாப்பு கருதி 8 விமான நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக சுமார் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, 3,40,000-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையங்களில் தவிக்கும் சூழல் உருவானது.

இயக்கம்

மீண்டும் இயங்கத் தொடங்கிய விமான நிலையங்கள்

தற்போது காற்று வீசும் திசை மாறியதால் சாம்பல் புகை விலகி, ஜகார்த்தாவின் சர்வதேச விமான நிலையம், ஹலிம் பெர்டானாகுசுமா மற்றும் மேற்கு ஜாவாவில் உள்ள ஹுசைன் சாஸ்திரநேகரா உள்ளிட்ட 5 விமான நிலையங்கள் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை தெற்கு சுமாத்ராவில் உள்ள ஒரு சிறிய விமான நிலையம் திறக்கப்பட்ட நிலையில், மூடப்பட்ட 8 விமான நிலையங்களில் 6 மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன; 2 நிலையங்கள் இன்னும் மூடப்பட்டே உள்ளன

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

பின்னணி

விமான நிறுவனங்களின் சவால்

விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், பல நாட்களாக தேங்கியுள்ள லட்சக்கணக்கான பயணிகளை உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பதும், நிறுத்தப்பட்டிருந்த 178-க்கும் மேற்பட்ட விமானங்களின் இயக்கத் தகுதியைச் பரிசோதிப்பதும் விமான நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த அனக் கிரக்கடோவா எரிமலை 1930-களில் இருந்தே அவ்வப்போது வெடித்து வருகிறது.

முன்னதாக 2018-ஆம் ஆண்டு இது வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட சுனாமியில் 429 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT