அமெரிக்காவின் ஹூதி எதிர்ப்புப் போரில் இணைந்தது இலங்கை
செய்தி முன்னோட்டம்
ஹூதி போராளிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கடல்சார் பிரிவில் இணைவதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
"நாங்கள் ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியனில் இணைய இருக்கிறோம்" என்று இலங்கையின் கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
100க்கும் மேற்பட்டோர் அடங்கிய ரோந்துக் கப்பலை இலங்கை அனுப்பும் என்று கயான் விக்ரமசூரிய கூறியுள்ளார்.
அந்நாட்டின் கப்பல்கள் ஏற்கனவே இலங்கையின் பரந்த கடல் எல்லையில் ரோந்து வருவதால், இந்த நடவடிக்கைக்கு கூடுதல் செலவாகாது என்று விக்கிரமசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வமாக அன்சார் அல்லா என்று அழைக்கப்படும் ஹூதி இயக்கம், 1990களில் ஏமன் நாட்டில் தோன்றிய ஒரு ஷியா இஸ்லாமிய அரசியல் மற்றும் இராணுவ அமைப்பாகும்.
ஏமனின் சன்னி பெரும்பான்மை அரசாங்கத்திற்கு எதிராக போராடி வரும் ஒரு குழு ஹூதி யாகும்.
டக்லவான்
இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் அதிகரிக்கும் தாக்குதல்கள்
சன்னி இஸ்லாமியர்களிடம் இருந்து ஆட்சியை பிடித்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு எதிராக இயங்க நினைப்பதே ஹூதிகளின் முக்கிய குறிக்கோளாகும்.
இந்நிலையில், சமீபகாலமாக ஹூதி போராளிகள் சர்வதேச கடல் வழிகளில் கொள்ளையடிப்பது, கப்பல்களை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏமன் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரபிக்கடல் ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்திய கடற்படை மத்திய மற்றும் வட அரபிக்கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது.
மேலும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் என்ற போரை அமெரிக்கா தொடங்கியுள்ளது.