பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ
செய்தி முன்னோட்டம்
காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது.
இதனால், இந்திய-கனட உறவுகள் சிதைந்துள்ளன. இதற்கிடையில், இன்னொரு காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், அந்த சதி திட்டத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதாகவும் அமெரிக்கா சந்தேகிக்கிறது.
எனவே, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு எதிரான குற்றசாட்டுகளை தனித்தனியாக விசாரித்து வருகின்றன.
டக்ஜ்வ்ஷ்னல்
நிகில் குப்தா என்ற இந்தியர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
அமெரிக்காவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைத்து வருகிறது. ஆனால், கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைக்க இந்தியா முன்பு மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசி இருக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாரின் கொலை வழக்கு விசாரணையிலும் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
"அமெரிக்காவில் இருந்து வெளிவரும் செய்திகள், நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறி வருவதை மேலும் உறுதிப்படுத்திஇருக்கிறது. அதாவது இந்தியா இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, பயங்கரவாதி பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய முயற்சித்ததற்காக நிகில் குப்தா என்ற இந்தியர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.