காசா மக்கள் வெளியேற 3 மணி நேர காலக்கெடு விதித்தது இஸ்ரேல்
காசா நகரம் மற்றும் வடக்கு காசாவில் வாழும் மக்கள் தெற்கு நோக்கி வெளியேற 'பாதுகாப்பான வழித்தடத்தை' திறந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படை, அந்த வழித்தட்டத்தில் 3 மணி நேரத்திற்கு தாக்குதில் நடத்தப்படாது என தெரிவித்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவில் தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்த தாக்குதலுக்காக காசா மக்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர முதலில் 24 மணி நேர காலக்கெடுவை இஸ்ரேல் வழங்கி இருப்பதாக கூறப்பட்டது. தற்போது தரைவழி தாக்குதலை தீவிர படுத்த திட்டமிட்டுள்ள இஸ்ரேல், அங்கு வாழும் மக்கள் வெளியேற 3 மணி நேர காலக்கெடுவை விதித்துள்ளது.
காசா மக்களின் பாதுகாப்பு முக்கியம்- இஸ்ரேல் பாதுகாப்பு படை
இந்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படை, "காசா மற்றும் வடக்கு காசா பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பிற்காக தெற்கு நோக்கி நகர கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந்தோம்" "நாங்கள் இந்த வழித்தடத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை எந்த தாக்குதலும் நடத்த மாட்டோம் என தெரிவித்துக் கொள்கிறோம். இதை பயன்படுத்தி தெற்கு நோக்கி வெளியேறுங்கள்." "உங்கள் மற்றும் உங்களின் குடும்பங்களின் பாதுகாப்பு முக்கியம். தயவு கூர்ந்து எங்கள் அறிவுறுத்தலைகளை கேட்டு வெளியேறுங்கள்." "ஹமாஸ் தலைவர்கள் ஏற்கனவே அவர்களது மற்றும் அவர்களது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டனர்." என பதிவிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 2,300க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.