
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
செய்தி முன்னோட்டம்
தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிடிஐ தலைவர் ஜமான் பார்க் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக அவரது கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இம்ரான் கான், தோஷகானா வழக்கில் ஊழல் செய்த குற்றவாளி என்று இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் இன்று அறிவித்தது.
மேலும், இம்ரான் கானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம், அவ்வாறு செய்யத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இவ்வ்க்
'இம்ரான் கான் போலியான விவரங்களை சமர்ப்பித்துள்ளார்: நீதிபதி
இம்ரான் கானை கைது செய்ய இஸ்லாமாபாத் போலீசார் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.
"இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காக சட்டத்தை கேலிக்கூத்தாக்குவது எப்படி நடக்கிறது என்பது முற்றிலும் வெட்கக்கேடானது, அருவருப்பானது" என்று அவரது கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்றைய விசாரணையின் போது, கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி(ஏடிஎஸ்ஜே) ஹுமாயுன் திலாவார், தோஷகானா வழக்கில் முன்னாள் பிரதமர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பளித்தார்.
"பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் இம்ரான் கான் போலியான விவரங்களை சமர்ப்பித்துள்ளார். மேலும், அவர் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது." என்று நீதிபதி தெரிவித்தார்.