LOADING...
எப்ஸ்டீன் சர்ச்சை ஆவணத்தில் டெஸ்லா சிஇஓ பெயர்; எலான் மஸ்க் உடனடி மறுப்பு
எப்ஸ்டீன் சர்ச்சை ஆவணத்தில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் பெயர்

எப்ஸ்டீன் சர்ச்சை ஆவணத்தில் டெஸ்லா சிஇஓ பெயர்; எலான் மஸ்க் உடனடி மறுப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 27, 2025
10:38 am

செய்தி முன்னோட்டம்

தொழில்நுட்பப் பில்லியனர் எலான் மஸ்க், அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஜனநாயகக் கட்சி எம்பிக்களால் வெளியிடப்பட்ட புதிய ஆவணங்களில், டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க், எப்ஸ்டீனின் தனித் தீவுக்குச் செல்லவிருந்ததாகத் தற்காலிகப் பயணத் திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ போன்ற பல பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ள இந்த ஆறு பக்க ஆவணத்தில், டிசம்பர் 6, 2014 அன்று விர்ஜின் ஐலாண்டில் உள்ள எப்ஸ்டீனின் சொத்துக்கான எலான் மஸ்க்கின் திட்டமிடப்பட்ட பயணம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம்

ஆதாரம் இல்லை

எலான் மஸ்கின் பெயருக்கு அடுத்ததாக, பயண அட்டவணையில், "இது இன்னும் நடக்கிறதா?" என்ற கையெழுத்துப் பதிவு இருந்தது. இருப்பினும், எலான் மஸ்க் உண்மையில் அந்தப் பயணத்தைச் செய்தாரா என்பதற்கான தெளிவான ஆதாரம் ஆவணங்களில் இல்லை. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை எலான் மஸ்க் உடனடியாகவும் திட்டவட்டமாகவும் மறுத்தார். தனது சமூக ஊடகத் தளமான எக்ஸில், அவர் இது தொடர்பான ஒரு செய்தியை பகிர்ந்து "இது பொய்." எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அனைத்து எப்ஸ்டீன் ஆவணங்களையும் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்று அமெரிக்க நீதித் துறைக்கு ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.