LOADING...
மேற்காசிய போரில் அதிரடித் திருப்பம்: 14 அம்ச அமைதித் திட்டத்தை முன்வைத்தது ஈரான் - டொனால்ட் ட்ரம்ப்பின் ரியாக்‌ஷன் என்ன?
14 அம்ச அமைதி திட்டத்தை முன்வைத்தது ஈரான்.

மேற்காசிய போரில் அதிரடித் திருப்பம்: 14 அம்ச அமைதித் திட்டத்தை முன்வைத்தது ஈரான் - டொனால்ட் ட்ரம்ப்பின் ரியாக்‌ஷன் என்ன?

எழுதியவர் Vasuki
May 04, 2026
03:30 pm

செய்தி முன்னோட்டம்

மேற்காசியப் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் கடும் போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் ஒரு புதிய ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளது. 14 அம்சங்களைக் கொண்ட விரிவான அமைதித் திட்டத்தை பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிற்கு ஈரான் அனுப்பியுள்ளது. "பந்தயக் களம் இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது" என ஈரான் அறிவித்துள்ள நிலையில், உலக நாடுகள் இந்த நகர்வை உற்றுநோக்கி வருகின்றன.

பொருளாதாரத் தடை

ஈரானின் 14 அம்ச அமைதி திட்டம்

யுரேனியம் செறிவூட்டல் மற்றும் அணுசக்தி விவகாரங்களால் தொடங்கிய இந்தப் போரை நிரந்தரமாக நிறுத்த ஈரான் முன்வைத்துள்ள 14 நிபந்தனைகளில் சில முக்கிய அம்சங்கள் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். ஈரானைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள அமெரிக்கக் கடற்படை முற்றுகையை அகற்ற வேண்டும். மேற்காசியப் பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கி, முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பதோடு, போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்திக்கு புதிய நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும். இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண 30 நாட்கள் காலக்கெடுவையும் ஈரான் நிர்ணயித்துள்ளது.

விலையைச் செலுத்த வேண்டும்

அதிபர் ட்ரம்ப்பின் எச்சரிக்கை

ஈரானின் இந்த அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான பாணியில் எதிர்கொண்டுள்ளார். சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்: "ஈரான் அனுப்பியுள்ள திட்டத்தை நான் விரைவில் ஆய்வு செய்வேன். ஆனால், கடந்த 47 ஆண்டுகளில் மனிதகுலத்திற்கு எதிராக அவர்கள் செய்த செயல்களுக்கு இன்னும் அவர்கள் பெரிய விலையைச் செலுத்தவில்லை. அப்படியிருக்கையில், இந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும் என்று என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை." என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இது ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா முழுமையாக ஏற்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

Advertisement

பாகிஸ்தானின் மத்தியஸ்தம்

சர்வதேச அழுத்தம்

இது குறித்து ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரீபாபடி கூறுகையில், "நாங்கள் எங்களின் அமைதித் திட்டத்தை வழங்கிவிட்டோம். இனி முடிவு அமெரிக்காவின் கையில் தான் உள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற 21 மணிநேரப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகக் கருதப்பட்ட நிலையில், இந்த 14 அம்சத் திட்டம் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை ஆதரித்தாலும், இஸ்ரேலின் நிலைப்பாடு இதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது. ட்ரம்ப்பின் 'அதிகபட்ச அழுத்தம்' கொள்கைக்கும் ஈரானின் '14 அம்சத் திட்டத்திற்கும்' இடையே ஒரு பொதுவான உடன்பாடு ஏற்படுவது தற்போதைய சூழலில் பெரும் சவாலாகவே உள்ளது.

Advertisement