
அமெரிக்க அதிபர் தேர்தலின் அடுத்தகட்டத்திலும் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி, நிக்கி ஹேலி பின்னடைவு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூ ஹாம்ப்ஷயர் பிரைமரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் ஒருமுகமாக தேர்வாவதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளது.
அதோடு, குடியரசு கட்சியில் இருந்து தேர்தலுக்கு நிற்கும் மற்றொரு வேட்பாளரரான நிக்கி ஹேலியை அவர் தோற்கடித்துள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல கோர்ட், கேஸ்களை சந்தித்து வந்தாலும், டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே குடியரசுக் கட்சி வாக்கெடுப்பில் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி, அயோவா குடியரசுக் கட்சிக் கூட்டத்தில் தோல்வியை சந்தித்ததை அடுத்து, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி, ட்ரம்பிற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி
PRIMARY RESULTS: Former President Donald Trump beat Nikki Haley in the heated New Hampshire primary. https://t.co/77XNe7EPkt pic.twitter.com/EzqaQVcSKu
— Fox News (@FoxNews) January 24, 2024