ஜார்ஜ் ஃப்லாய்ட்டை கொன்ற குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற முன்னாள் காவல் அதிகாரி, கத்தியால் குத்தப்பட்டார்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில், 'Black Lives Matter' என்ற புரட்சி வெடிக்க காரணமாக இருந்த ஜார்ஜ் ஃப்லாய்ட் என்ற கறுப்பினத்தவரின் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி, சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அச்சிறையில், அவரை சக கைதி ஒருவர் கத்தியால் குத்தியதாகவும், அதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் குறித்த காரணம் இன்னும் தெரியவில்லை.
டஸ்கனில் உள்ள சிறையில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த சிறை பாதுகாப்பு குறைபாடுகளுக்கும், ஆள் பற்றாக்குறைக்கும் அறியப்பட்டது என AP தெரிவிக்கிறது.
2020 ஆம் ஆண்டில், ஜார்ஜ் ஃப்லாய்டை கொலை செய்த குற்றத்திற்காக 21 ஆண்டுகள் கூட்டாட்சி தண்டனையும், 23.5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்து வருகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
முன்னாள் காவல் அதிகாரி, கத்தியால் குத்தப்பட்டார்
Derek Chauvin, the former Minneapolis police officer convicted in the death of George Floyd, has been stabbed in federal prison and was seriously injured.#GeorgeFloyd | #derekchauvin | #UnitedStates https://t.co/fgLs5VppBn
— The Jerusalem Post (@Jerusalem_Post) November 25, 2023