Page Loader
சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம்
பரவும் கொரோனா வைரஸால் அதிகரிக்கும் மரணங்கள்

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம்

எழுதியவர் Nivetha P
Dec 23, 2022
11:16 am

செய்தி முன்னோட்டம்

2019ம் ஆண்டு இறுதி மாதத்தில் சீனாவில் பரவ துவங்கியது கொரோனா வைரஸ். அங்கு துவங்கிய இந்த வைரஸ் உலகம் முழுக்க அனைத்து நாடுகளுக்கும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. சமீப காலங்களில் தான் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைய துவங்கியது என்று செய்திகள் வெளியானது, இதனால் மக்களும் சற்று நிம்மதியாக இருக்க துவங்கினர். ஆனால் இதனை கெடுக்கும் வகையில், மீண்டும் கொரோனா வைரஸ் பரவ துவங்கியுள்ளது. பரவலை தடுக்க ஆரம்பத்தில் அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, ஆனால் அதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு வந்ததால் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சீனாவில் பரவும் பிஎப் 7 என்னும் புதுவித கொரோனா வைரஸ் தற்போது கோரத்தாண்டவமாடி வருகிறது.

மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை

அடுத்த 3 மாதங்களில் 60% பேர் சீனாவில் இறக்க நேரிடும்

உலகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி. கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 65,85,13,112 என்றும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66,74,236 என்றும், கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தோர் எண்ணிக்கை 63,20,87,585 என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,97,51,291 என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் தான் தற்போது பிஎப் 7 எனப்படும் புது வித கொரோனா வைரஸ் சீனாவில் அதிகளவில் பரவி வருகிறது, அடுத்த 3 மாதங்களில் 60% பேர் இதனால் இறக்க நேரிடும் என்று சர்வதேச ஊடகங்களும், மருத்துவ வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சீனாவில் நோய் பாதிப்பால் மரணங்கள் அதிகரித்து வருவதால், சடலங்கள் குப்பை போல் மொத்த மொத்தமாக எரியூட்டப்பட்டு வருகிறதாம்.