கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்து; 33 பேர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில், 125 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியதில் 33 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் 'சி-130 ஹெர்குலஸ்' ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், பெரு நாட்டின் எல்லையோரமான புவேர்ட்டோ லெகுய்சாமோ என்ற இடத்திலிருந்து நேற்று புறப்பட்டது. விமானத்தில் 114 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 125 பேர் இருந்தனர். ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளில் விமானம் செங்குத்தாகக் கீழே விழுந்து நொறுங்கியதாகச் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் காட்டுகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING: Colombian Air Force plane carrying 110 people crashes near Puerto Leguízamo - local media pic.twitter.com/YroHAk1lHG
— BNO News Live (@BNODesk) March 23, 2026
மீட்பு
உயிரிழப்பு மற்றும் மீட்புப் பணி
இந்த விபத்தில் இதுவரை 33 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 81 பேர் படுகாயமடைந்துள்ளனர், அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோரின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரியவில்லை என கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கவலை தெரிவித்துள்ளார். அமேசான் வனப்பகுதியின் அடர்ந்த பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் பெட்ரோ, ராணுவத்தின் பழைய ஆயுதங்கள் மற்றும் விமானங்களை நவீனப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த விடாமல் முட்டுக்கட்டை போடும் நிர்வாக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.