Loading...
72 மணி நேரத்தில் வெடித்து சிதறும் ஆபத்து! 270 பேரைப் பலிகொண்ட நேபாள வெள்ளத்தில் புதிய பேரழிவு எச்சரிக்கை
நேபாளத்திற்கு புதிய பேரழிவு எச்சரிக்கை

72 மணி நேரத்தில் வெடித்து சிதறும் ஆபத்து! 270 பேரைப் பலிகொண்ட நேபாள வெள்ளத்தில் புதிய பேரழிவு எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 27, 2026
07:02 pm

செய்தி முன்னோட்டம்

கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவை சந்தித்துள்ள நேபாள எல்லைப் பகுதியில், அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றொரு பிரம்மாண்டக் கடல் போன்ற ஏரி உடையும் அபாயம் இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது. சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உருவாகியுள்ள இந்த இயற்கை ஏரியில் தற்போது 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் நீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதால், கீழ்நிலைப் பகுதிகள் மீண்டும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை

270க்கும் மேற்பட்டோர் பலி

நேபாளத்தின் போதே கோஷி நதிப் படுகையில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 270க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நாராயணி நதியில் மட்டுமே 121 உடல்கள் மீட்கப்பட்டு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் உட்பட 1,400க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

ஆய்வு

சீனப் பிரதமர் லீ சியாங் நேரில் ஆய்வு

இமயமலை எல்லைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு சீனப் பகுதியான திபெத்தின் கியிராங் துறைமுகத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சீனப் பிரதமர் லீ சியாங் வெள்ளம் பாதிக்கப்பட்ட திபெத் எல்லைப் பகுதிக்கு நேரில் சென்று அவசரகால மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

சீனா தனது செயற்கைக்கோள் தரவுகள் மூலம் வெள்ளத்தின் போக்கைக் நிகழ்நேரத்தில் கணித்து மீட்புக் குழுக்களுக்கு வழிகாட்டி வருகிறது.

ADVERTISEMENT

நிவாரணப் பொருட்கள்

இந்தியா அனுப்பிய 37.5 டன் நிவாரணப் பொருட்கள்

இயற்கைப் பேரழிவால் தவிக்கும் அண்டை நாடான நேபாளத்திற்கு இந்தியா உடனடியாக உதவிக்கரங்களை நீட்டியுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சார்பில் 37.5 டன் எடையுள்ள அவசரகால நிவாரணப் பொருட்கள், மருத்துவக் உபகரணங்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் விமானம் மூலம் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய மீட்புக் குழுக்களும் நேபாள வீரர்களுடன் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ADVERTISEMENT