LOADING...
'சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்' பேராசிரியர் ஜியாங்: USA-ஈரான் போர் குறித்து அவர் கணித்தது பலித்ததா?
'சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்' பேராசிரியர் ஜியாங்

'சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்' பேராசிரியர் ஜியாங்: USA-ஈரான் போர் குறித்து அவர் கணித்தது பலித்ததா?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 05, 2026
04:18 pm

செய்தி முன்னோட்டம்

2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது. பெய்ஜிங்கை சேர்ந்த தத்துவப் பேராசிரியரான சுயெசின் ஜியாங், தற்போது 'சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்' என்று சமூக வலைதளங்களில் கொண்டாடப்படுகிறார். தனது 'பிரிடிக்டிவ் ஹிஸ்டரி' என்ற யூடியூப் சேனல் மூலம் 2024 மே மாதத்தில் அவர் வெளியிட்ட விரிவுரையில் மூன்று முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்: 1. டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக ஆட்சிக்கு வருவார். 2. அவர் பதவி ஏற்றதும் ஈரான் மீது போர் தொடுப்பார். 3. இந்தப் போர் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

விளக்கம்

ஈரான் ஏன் வலிமையானது? ஜியாங்கின் விளக்கம்

அவரது கணிப்புகளில் தற்போது ட்ரம்ப் அதிபராகி, ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் முதல் இரண்டு கணிப்புகள் அப்படியே பலித்துள்ளன. அமெரிக்காவின் பிரபல 'பிரேக்கிங் பாயிண்ட்ஸ்' நிகழ்ச்சியில் பேசிய ஜியாங், ஈரான் அமெரிக்காவை விட சில கூடுதல் பலங்களைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். "ஈரான் கடந்த 20 ஆண்டுகளாக இந்த மோதலுக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது. குறிப்பாக 2025 ஜூன் மாதம் நடந்த 12 நாள் போர், ஈரான் தனது எதிரிகளின் பலவீனங்களை ஆராயக் கிடைத்த ஒரு ஒத்திகையாக அமைந்தது," என்று அவர் குறிப்பிடுகிறார். மேலும், ஈரான் நாட்டின் மலைப்பாங்கான புவியியல் அமைப்பு, அமெரிக்க வீரர்களை 'ராணுவ வீரர்களாக' அல்லாமல் 'பிணைக்கைதிகளாக' மாற்றிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

விவரங்கள்

யார் இந்த சுயெசின் ஜியாங்?

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஏல் (Yale) பல்கலைக்கழகத்தில் பயின்ற ஜியாங், ஒரு சிறந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் கல்வியாளர். வரலாற்றில் நடக்கும் சுழற்சி முறையிலான மாற்றங்களை ஆய்வு செய்து, எதிர்காலத்தைக் கணிப்பதே இவரது பாணி. 'சைக்கோ ஹிஸ்டரி' என்ற அறிவியல் புனைவு தத்துவத்தின் அடிப்படையில் இவர் தனது கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

Advertisement