Page Loader
140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீனாவில் கனமழை: 20 பேர் பலி 
தொடர் மழையினால் அணைகள் மற்றும் ஆறுகளின் நீர் மட்டம் அபாயகரமான நிலைக்கு உயர்ந்தது.

140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீனாவில் கனமழை: 20 பேர் பலி 

எழுதியவர் Sindhuja SM
Aug 02, 2023
06:09 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் தலைநகரில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், கடும் இயற்கை சீற்றத்தை சீனா எதிர்கொண்டிருக்கிறது. குறைந்தது 140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பெய்ஜிங்கில் மழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் இன்று காலை வரை பெய்ஜிங்கில் 744.8 மில்லிமீட்டர் மழை (29.3 அங்குலம்) பதிவாகியுள்ளது. இந்த கனமழையால், பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹெபே மாகாணம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர் மழையினால் அணைகள் மற்றும் ஆறுகளின் நீர் மட்டம் அபாயகரமான நிலைக்கு உயர்ந்தது. இதனையடுத்து, பெய்ஜிங் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சஜ்ஜிலேவ்க்

 20 பேர் உயிரிழந்துள்ளனர், 27க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்

கனமழை காரணமாக சீனாவின் பல நகரங்களில் சாலைகள், மின் வசதி மற்றும் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கை சுற்றியுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கார்கள் மற்றும் சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், மேற்கு சீனாவில் உள்ள சுவோசோ நகரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு, அந்த நகரத்தின் காவல்துறையினர், மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக விளக்குகள் தேவை என்று சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. பெய்ஜிங்கில் பெய்த மழையால் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர், 27க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்த பேரழிவால் 850,000க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.