LOADING...
கள்ளக்காதல் வைத்ததற்காக ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த சிஇஓ; நெட்டிசன்களிடையே விவாதத்தைக் கிளப்பிய சம்பவம்
கள்ளக்காதல் வைத்ததற்காக ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த சிஇஓ; நெட்டிசன்களிடையே விவாதத்தைக் கிளப்பிய சம்பவம்

கள்ளக்காதல் வைத்ததற்காக ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த சிஇஓ; நெட்டிசன்களிடையே விவாதத்தைக் கிளப்பிய சம்பவம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2025
05:34 pm

செய்தி முன்னோட்டம்

பணியிடத்தில் தனிப்பட்ட ஒழுக்க நெறிமுறைகளின் எல்லைகள் குறித்து இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ள நிலையில், கார்டோன் வென்ச்சர்ஸ் (Cardone Ventures) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நடாலி டாசன், நிறுவனத்தில் சக ஊழியருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இரு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ததாக அறிவித்துள்ளார். இத்தகைய நேர்மையற்ற தன்மை நிறுவனச் சூழலுக்குப் பொறுப்பற்ற தன்மை என்று கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'தி டைரி ஆஃப் எ சிஇஓ' (The Diary of a CEO) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய நடாலி டாசன், அந்த விவகாரம் தெரிய வந்தவுடன் உடனடியாகப் பணி நீக்கம் செய்ய முடிவெடுத்ததாகக் கூறினார்.

கள்ளக்காதல்

கள்ளக்காதலை அனுமதிக்க முடியாது

நடாலி டாசன் பேசும்போது, "நான் கள்ளக்காதலை அனுமதிக்க முடியாது. தங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டிய நபரை ஏமாற்றினால், அவர்கள் தங்கள் வேலையையோ அல்லது வாடிக்கையாளர்களையோ ஏமாற்ற மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? அத்தகைய நபர் இந்தச் சூழலுக்கு ஒரு பொறுப்பற்ற நபர்தான்." என்று உறுதியாகத் தெரிவித்தார். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நெறிமுறைகள் ஒன்றோடொன்று கைகோர்த்துச் செல்வதாக நடாலி டாசன் நம்புகிறார். ஒரு நிறுவனத்தின் தலைவராக, நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறலின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தைப் பேணுவது தனது பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.

விவாதம்

சமூக வலைதளங்களில் விவாதம்

கோடீஸ்வரரான நடாலி டாசனின் இந்தப் பணி நீக்க நடவடிக்கை, ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அவர்களின் தொழில்முறை நிலைக்கும் இடையிலான எல்லைகள் குறித்து சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தைத் தூண்டியுள்ளது. சிலர் அவரது நெறிமுறைகள் சார்ந்த நிலைப்பாட்டைப் பாராட்டியுள்ளனர். உதாரணமாக, ஒரு பயனர், "நேர்மையற்றவர்களுக்கு வணிகத்தில் அனுமதி அளிப்பது, ஒருவித தார்மீகச் சரிவின் அறிவிப்பாகும்" என்று கூறியுள்ளார். அதேசமயம், மற்றவர்கள் இது மேலாளர் அதிகாரத்தை மீறும் செயல் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது என்றும் விமர்சித்துள்ளனர்.