LOADING...
329 பேர் பலியான கொடூரம்! 40 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் காலிஸ்தான் தொடர்பை ஒப்புக்கொண்டது கனடா
40 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் காலிஸ்தான் தொடர்பை ஒப்புக்கொண்டது கனடா

329 பேர் பலியான கொடூரம்! 40 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் காலிஸ்தான் தொடர்பை ஒப்புக்கொண்டது கனடா

எழுதியவர் Sekar Chinnappan
Jun 26, 2026
08:42 am

செய்தி முன்னோட்டம்

கடந்த 1985 ஆம் ஆண்டு 329 பயணிகளின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா கனிஷ்கா பயணிகள் விமான குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு, கனடாவில் இருந்து இயங்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளே முழு முதற்காரணம் என்று கனடா நாட்டின் உளவுத்துறை 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வெளிப்படையான ஒப்புதல் சர்வதேச அளவிலும், குறிப்பாக இந்தியா - கனடா இருதரப்பு உத்திசார் உறவுகளிலும் ஒரு மிக முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

கொடூரமான பயங்கரவாத செயல்

கனடா உளவுத்துறை சிஎஸ்ஐஎஸ் பதிவு

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான கனடாவின் தேசிய நினைவு தினத்தை முன்னிட்டு, கனடா பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பு (சிஎஸ்ஐஎஸ்) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில் இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1985 ஜூன் 23 அன்று கனடாவில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுப் பதித்து வைத்த வெடிகுண்டாலேயே கனிஷ்கா விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதாகவும், இது கனடா வரலாற்றிலேயே நிகழ்ந்த மிக மோசமான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் என்றும் உளவு அமைப்பு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.

பலியான 329 அப்பாவி உயிர்கள்

பிரதமர் மார்க் கார்னி இரங்கல்

இந்தக் கொடூரத் தாக்குதல் நடந்து 41 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தற்போதைய புதிய கனடா பிரதமர் மார்க் கார்னி விடுத்துள்ள அறிக்கையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 329 பேரில் 268 பேர் கனடா குடிமக்கள் (பெரும்பாலோர் இந்திய வம்சாவளியினர்) மற்றும் 24 பேர் இந்தியப் பிரஜைகள் ஆவர். வன்முறை மற்றும் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் கனடா அரசு தற்பொழுது முழு உறுதியுடன் இருப்பதாகப் பிரதமர் மார்க் கார்னி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

பின்னணி

அட்லாண்டிக் கடலில் நடுவானில் வெடித்த கனிஷ்கா பின்னணி

ஜூன் 23, 1985 அன்று மாண்ட்ரியலில் இருந்து லண்டன் வழியாகப் புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா 182 விமானம், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சரியாக 45 நிமிடங்களுக்கு முன்னதாக அயர்லாந்து கடற்கரைக்கு அருகே அட்லாண்டிக் கடலின் மேல் பறந்தபோது, அதன் லக்கேஜ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. 1984 இல் இந்திய ராணுவம் பொற்கோவிலில் நடத்திய ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கைக்குப் பழிவாங்கும் நோக்கில் காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்த சதியை அரங்கேற்றியதாக விசாரணையில் தெரியவந்தது. விபத்து நடந்த பகுதியிலிருந்து 131 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.

Advertisement

இந்தியா - கனடா

இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்?

கனிஷ்கா விமானத் தாக்குதல் என்பது பல தசாப்தங்களாக இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவில் ஒரு பெரும் முள்ளாகவே நீடித்து வந்தது. கனடா மண்ணில் இருந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களைக் கனடா ஒடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் காலத்தில் இருநாட்டு உறவுகளும் மிக மோசமடைந்த நிலையில், நடப்பு 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, இருநாடுகளின் தூதரக உறவுகளில் தற்பொழுது பெரிய அளவில் சுமுகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement