Page Loader
கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டப் புத்தகம்! 
100 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டப் புத்தகம்!

கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டப் புத்தகம்! 

எழுதியவர் Arul Jothe
May 26, 2023
02:48 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில், வரலாற்றாசிரியர் பென்சன் லாசிங் எழுதிய ''A Family History of the United States'' என்ற புத்தகம், 96 ஆண்டுகளுக்குப் பிறகு, செயின்ட் ஹெலினா பொது நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது 1927இல், படிப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட புத்தகம். இன்ஸ்டாகிராம் போஸ்ட் படி, ஜிம் பெர்ரி என்பவர், தனது வீட்டை சுத்தம் செய்யும் போது, அவருக்கு கிடைத்த இந்த பழைய புத்தகத்தை, நூலகத்தில் திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. "எனது மூதாதையர், நூலகத்திலிருந்து கடன் வாங்கிய புத்தகம் இது. ஐந்து தலைமுறைகளாக எங்களிடம் இருந்த ஒரு பழைய புத்தகம்!" என்று பெர்ரி கூறியுள்ளார். நூலக இயக்குனர் கிறிஸ் க்ரீடன், "நான் பார்த்தவற்றிலேயே, இது மிகவும் பழமையான புத்தகம்" என்று தெரிவித்துள்ளார்.

Library Book

செயின்ட் ஹெலினா பொது நூலகம்

இந்த லைப்ரரி புத்தகம், 1927-இல், பெர்ரியின் மனைவியின் தாத்தா, ஜான் மெக்கார்மிக் அவர்களால், நூலகத்திலிருந்து எடுத்துவரப்பட்டது என்றும், தனது இரண்டு மகள்களுக்கு அமெரிக்க வரலாற்றைப் பற்றி கற்பிக்க இந்த புத்தகத்தை எடுத்திருக்கலாம் என்றும், பெர்ரி கூறினார். நூலக ஊழியர்கள் புத்தகத்தைத் திறந்து பார்த்தபோது மிகவும் சேதமாகி இருந்ததாகவும், பக்கங்கள் அனைத்தும் கிழிந்து போகக்கூடிய நிலைமையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில், புத்தகம் திரும்பப் கொடுக்கப்பட வேண்டிய தேதியின் முத்திரை, மங்கலாக இருந்தது. அதை கொண்டு தான், இந்த புத்தகம் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்டது என கண்டுபிடித்ததாக பெர்ரி கூறுகிறார். அதில் பிப்ரவரி 21, 1927 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. செயின்ட் ஹெலினா பொது நூலகம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளது.

Instagram அஞ்சல்

Instagram Post