Loading...
பாபா வங்கா கணிப்பு 2027: சூப்பர் ஹியூமன்களை உருவாக்கப் போகும் விசித்திர நோய்?
பாபா வங்கா, 2027-ஆம் ஆண்டிற்காக கணித்துள்ள புதிய தீர்க்கதரிசன விவரங்கள் வெளியாகியுள்ளன

பாபா வங்கா கணிப்பு 2027: சூப்பர் ஹியூமன்களை உருவாக்கப் போகும் விசித்திர நோய்?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 08, 2026
04:39 pm

செய்தி முன்னோட்டம்

பல்கேரியாவின் புகழ்பெற்ற ஞானி, குறிசொல்லி பாபா வங்கா, 2027-ஆம் ஆண்டிற்காக கணித்துள்ள புதிய தீர்க்கதரிசன விவரங்கள் வெளியாகியுள்ளன. அவரது ஆதரவாளர்களின் கூற்றுப்படி, 2027-இல் நிகழும் ஒரு விசித்திர நோய் அல்லது மரபியல் சோதனை மூலம் மனிதர்களில் சிலருக்கு அசாத்தியமான சூப்பர் ஹியூமன் சக்திகள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அறிவியல் புனைகதை திரைப்படம் போல தோன்றும் இக்கணிப்பில், ஒரு மர்ம நோய் அல்லது ஆய்வகச் சோதனையானது ஒரு குறிப்பிட்ட மனித குழுவை பாதிக்கும் என்றும், அதில் ஒரு சிலருக்கு மட்டும் மனித வரம்புகளை தாண்டிய அமானுஷ்ய சக்திகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த சக்திகள் என்ன வகையானவை என்பது குறித்தோ அல்லது அது எவ்வாறு நிகழும் என்பது குறித்தோ விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கணிப்புகள்

2026-ஆம் ஆண்டிற்காக பாபா வங்கா கூறிய கணிப்புகள்

ஏற்கனவே 2026-ஆம் ஆண்டிற்காக பாபா வங்கா தெரிவித்த பல கணிப்புகள் கவனத்தைப் பெற்றுள்ளன:

கிழக்கில் தொடங்கி மேற்கில் பரவும் மாபெரும் போர் மற்றும் விளாடிமிர் புடின் உலகத் தலைவராக உருவெடுப்பார் என்ற கணிப்பு; வெனிசுலா, கொலம்பியா, ஜப்பான், இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள் மற்றும் நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்கள்; ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என்றும், 2026 நவம்பரில் விளையாட்டு நிகழ்வு ஒன்றின் போது மிகப்பெரிய விண்கலத்தில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருகை தருவார்கள் என்றும் அவர் கணித்துள்ளார்.

கொரோனா தொற்று, 9/11 தாக்குதல் மற்றும் இளவரசி டயானாவின் மறைவு போன்றவற்றை பாபா வங்கா முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படும் நிலையில், 2027-க்கான இக்கணிப்பும் இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ADVERTISEMENT