ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை அமலுக்கு வந்தது:எந்தெந்த செயலிகள் நீக்கப்பட்டன?
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரை பாதுகாக்கும் நோக்கில், சமூக ஊடக பயன்பாட்டை தடுக்கும் புதிய சட்டம் இன்று (டிசம்பர் 10, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது. அடிமையாக்கும் அல்காரிதம்கள், ஆன்லைன் குற்றவாளிகள் மற்றும் இணைய கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். இந்த உத்தரவு பரிசீலனையில் இருந்த போதே மெட்டாவின் Instagram, Facebook, Threads உள்ளிட்ட தளங்கள் டிசம்பர் 4 முதலே 16 வயதுக்குட்பட்டோரின் கணக்குகளை நீக்கத் தொடங்கி விட்டது. இந்த விதிகளைப் பின்பற்றத் தவறும் தளங்களுக்கு 49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Today, we have officially banned social media accounts for under 16s. pic.twitter.com/9Ap5mZfNoq
— Anthony Albanese (@AlboMP) December 9, 2025
தடை
தடை விதிக்கப்பட்ட முக்கிய செயலிகள்
இந்தச் சட்டத்தின் கீழ், வயதுச் சரிபார்ப்பு முறைகள் மூலம் 16 வயதுக்குட்பட்ட பயனர்களின் கணக்குகளை நீக்கவோ அல்லது முடக்கவோ வேண்டும் என்று கிட்டத்தட்ட 10 முக்கியத் தளங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட தளங்கள் பின்வருமாறு: 1. இன்ஸ்டாகிராம் 2. ஃபேஸ்புக் 3. திரெட்ஸ் 4. ஸ்னாப்ச்சாட் 5. யூட்யூப் 6. டிக்டாக் 7. கிக் 8. ரெட்டிட் 9. ட்விட்ச் 10. எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இந்த உத்தரவின் மூலம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தளங்களிலும் 16 வயதுக்குட்பட்ட அனைத்து கணக்குகளும் உடனடியாக முடக்கப்படும்.