
அலாஸ்கா ஏர்லைன்ஸின் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
செய்தி முன்னோட்டம்
171 போயிங் 737 MAX 9 விமானங்களை தரையிறக்க அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்(FAA) உத்தரவிட்டதை அடுத்து, அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஞாயிற்றுக்கிழமை 170 விமானங்களையும், திங்களன்று கூடுதலாக 60 விமானங்களையும் ரத்து செய்தது.
இன்னும் சில நாட்களுக்கு இந்த விமானங்களின் ரத்து தொடரும் என்பதால், இதனால் கிட்டத்தட்ட 25,000 பயணிகள் பாதிப்படைவார்கள்.
கடந்த சனிக்கிழமை, 174 பயணிகளை ஏற்றி சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர வெளியேறும் கதவு நடுவானில் பிய்ந்து காற்றொரு பறந்தது. அதனையடுத்து, அந்த விமானம் அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது,
அதிர்ஷ்டவசமாக, அந்த விமானத்தில் இருந்த பயணிகளும் பணியாளர்களும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பான சூழலை உருவாக்கியது.
ட்ஜ்கவ்கின்ள
போயிங் விமானங்களால் தொடரும் பிரச்சனைகள்
விபத்துக்குள்ளான அந்த விமானம் ஒரு புத்தம் புதிய விமானமாகும். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அசெம்பிளி லைனில் இருந்து வெளியேறி அது சான்றிதழைப் பெற்றது.
எனவே, இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு, அதே வகையை சேர்ந்த அனைத்து போயிங் ஜெட் விமானங்களையும் தற்காலிகமாக முடக்க அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் உத்தரவிட்டது.
அந்த ஜெட் விமானங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்த பின்னர் தான் அவை மீண்டும் இயக்கப்படும் என்று அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்திருந்தது.
இந்த சம்பவம் போயிங்கின் 737 MAX 9 விமானங்களின் பாதுகாப்பு குறித்த பரந்த கவலைகளை எழுப்புயுள்ளது.
போயிங் விமானங்களால் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் இரண்டு விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.