மலாவி துணை அதிபரை ஏற்றிச் சென்ற விமானத்தை தேடும் பணி தீவிரம்
மலாவின் தலைநகரான லிலோங்வேயில் இருந்து காலை 09:17 மணிக்கு, மலாவியின் துணை அதிபர் சிலிமா மற்றும் அவருடன் பயணித்த ஒன்பது பேருடன் கிளம்பிய ராணுவ விமானம் நடுவானில் திடீரென தொடர்பை இழந்து விட்டது. இதனை மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்தது. மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமாவை ஏற்றிச் சென்ற காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடரும் என்று தென்னாப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதி, திங்கள்கிழமை அன்று தெரிவித்தார். விமானம் ரேடாரில் இருந்து விலகியதிலிருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமானநிலைய அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த விமானம் காலை 10:02 மணிக்கு Mzuzu விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
தலைநகருக்கு திரும்ப உத்தரவிடப்பட்ட விமானம்
மோசமான வானிலை காரணமாக துணை ஜனாதிபதி பயணித்த விமானம், விமான நிலையத்தில் தரையிறங்க முடியவில்லை, மேலும் தலைநகருக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டது என்று ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். "நாங்கள் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கையின் ஒவ்வொரு இழையையும் நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன்," என்று அவர் கூறினார். தற்போது தேடுதல் பகுதி 10 கிமீ (6 மைல்) சுற்றளவில் உள்ள ஒரு வனப் பகுதியில் நடைபெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன. அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சாத்தியமான வேட்பாளராகக் கருதப்படும் சிலிமா, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2022 இல் கைது செய்யப்பட்டார். எனினும் கடந்த மாதம் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மலாவி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.