Page Loader
நேபால் விமான விபத்து: விமான பணிபெண்ணின் கடைசி நிமிட டிக்டாக் வைரல்
இந்த விமான விபத்தில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்

நேபால் விமான விபத்து: விமான பணிபெண்ணின் கடைசி நிமிட டிக்டாக் வைரல்

எழுதியவர் Sindhuja SM
Jan 17, 2023
10:43 am

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் விமான பணிபெண் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. விபத்தில் இறந்த நான்கு கேபின் பணியாளர்களில் ஒருவரான ஓஷின் அலே, நேபாளத்தில் பிரபலமான டிக்டாக்கராக இருந்தார். ஓஷின் எடுத்த கடைசி TikTok வீடியோ, அவர் விமானத்தில் சிரித்துக்கொண்டே போஸ் கொடுப்பது போல் இருக்கிறது. மனிகண்ட்ரோல் அறிக்கையின்படி, விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து இந்தியர்கள் உட்பட 72 பேருடன் பயணித்த பயணிகள் விமானம், பொக்காரா என்ற ரிசார்ட் நகரத்தில் புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இதில் சுமார் 68 பேர் உயிரிழந்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

விமான பணிப்பெண்ணின் வைரல் வீடியோ: