அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 9.3 கிமீ(5.78 மைல்) ஆழத்தில் பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அலாஸ்காவின் சாண்ட் பாயிண்ட் அருகே 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தென்அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பத்தில் உள்ள கென்னடி நுழைவாயிலிலிருந்து யூனிமாக் கணவாய் வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வட அமெரிக்காவின் பிற நாடுகளில் உள்ள பசிபிக் கடற்கரைகளில் சுனாமி ஏற்பட்ட வாய்ப்பிருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
அலாஸ்காவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Magnitude 7.4 earthquake strikes Alaska Peninsula region, tsunami warning issued https://t.co/jqBJOREA7x pic.twitter.com/xBqKTtupWh
— Reuters (@Reuters) July 16, 2023