WWE மணி இன் தி பேங்க் 2026: எல்ஏ நைட்டை வீழ்த்தி பட்டத்தைத் தக்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் நியூ ஓர்லீன்ஸில் நடைபெற்ற WWE நிறுவனத்தின் மிக முக்கியப் பிரீமியம் நேரலை நிகழ்வான மணி இன் தி பேங்க் 2026 பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறியுள்ளது. தொடக்க ஆட்டத்திலேயே தனது உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக எல்ஏ நைட்டை எதிர்கொண்ட தி டிரைபல் சீஃப் ரோமன் ரெய்ன்ஸ், மிகக் கடுமையான மோதலுக்குப் பிறகு அவரை வீழ்த்தித் தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார். எல்ஏ நைட் சாம்பியனாவதற்கான பல தருணங்கள் அமைந்தபோதும், அவற்றையெல்லாம் முறியடித்த ரெய்ன்ஸ், ரெஸில்மேனியா 42-ல் வென்ற பட்டத்தைத் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துள்ளார்.
ஆம்புலன்ஸ் மோதல்
பெண்டா படைத்த புதிய சாதனை
ஆடவர் மணி இன் தி பேங்க் ஏணிப் போட்டியில், மெக்சிகன் மல்யுத்த வீரர் பெண்டா வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார்.
ஏணியின் உச்சியில் நின்று பிரான் பிரேக்கரை மெக்சிகன் டிஸ்ட்ராயர் மூவ் மூலம் வீழ்த்திய அவர், தொடர்ந்து ஏறிச் சென்று வெற்றிப் பெட்டியைக் கைப்பற்றினார்.
இப்போட்டியில் 22 வயதான இளம் வீரர் ஜெவோன் இவான்ஸ் ஆம்புலன்ஸில் ஏறி காயமடைந்து வெளியேறியபோதும், மீண்டும் திரும்பிவந்து போராடி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
எனினும் பிரேக்கர் அவரை ஏணியிலிருந்து ஆம்புலன்ஸ் மீது தூக்கி எறிந்து அதிர்ச்சி தந்தார்.
முன்னணி நட்சத்திரங்களான சிஎம் பங்க் மற்றும் கெவின் ஓவன்ஸ் இதில் பெரிதாகக் களம் காணாததால், கிரவுன் ஜூவல் நிகழ்வில் இருவரும் ஒற்றையர் ஆட்டத்தில் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்பியனான லிவ் மார்கன்
வரலாறு படைத்த டிஃபானி ஸ்ட்ராட்டன்
மகளிர் பிரிவில் நடைபெற்ற ஏணிப் போட்டியில் வென்று, டபிள்யூடபிள்யூஇ வரலாற்றிலேயே மணி இன் தி பேங்க் ப்ரீஃப்கேஸை இரண்டு முறை வென்ற முதல் பெண் நட்சத்திரம் என்ற சாதனையை டிஃபானி ஸ்ட்ராட்டன் படைத்தார்.
2024-ல் முதல்முறை வென்ற அவர், தற்போது இரண்டாவது முறையாக இந்த வாய்ப்பைத் தட்டிச் சென்றுள்ளார்.
அதேபோல், ஸ்டெபானி வேக்கர் மற்றும் பெக்கி லின்ச் ஆகியோருடன் நடைபெற்ற மும்முனை ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற லிவ் மார்கன், மகளிர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை மீண்டும் கைப்பற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.