Page Loader
WTC Final 2023 : முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

WTC Final 2023 : முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 08, 2023
07:46 pm

செய்தி முன்னோட்டம்

ஓவலில் நடந்து வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்தது. ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் இரண்டு சதங்கள் மூலம் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா, இரண்டாம் நாள் முதல் அமர்வில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

milestones reached by players

முதல் இன்னிங்ஸில் வீரர்கள் எட்டிய மைல்ஸ்டோன்கள்

டிராவிஸ் ஹெட் முதல் நாள் சதமடித்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரலாற்றில் முதல் சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி 285 ரன்கள் குவித்ததன் மூலம், இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு விக்கெட்டுக்கும் நான்காவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோரை பதிவு செய்தனர். மேலும் இங்கிலாந்தில் ஆஸ்திரேலியாவுக்காக நான்காவது விக்கெட்டுக்கு இரண்டாவது மிக உயர்ந்த பார்ட்னர்ஷிப்பாகவும் இது அமைந்தது. இந்திய அணியின் முகமது சிராஜ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை கடந்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை தொட்ட 42வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். 19 போட்டிகளில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.