LOADING...
மகளிர் ஐபிஎல் 2026: ஜனவரி 9ஆம் தேதி தொடக்கம்; இரண்டு மைதானங்களில் மட்டுமே போட்டி
மகளிர் ஐபிஎல் 2026 ஜனவரி 9ஆம் தேதி தொடக்கம்

மகளிர் ஐபிஎல் 2026: ஜனவரி 9ஆம் தேதி தொடக்கம்; இரண்டு மைதானங்களில் மட்டுமே போட்டி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 27, 2025
08:00 pm

செய்தி முன்னோட்டம்

மகளிர் ஐபிஎல் (WPL) நான்காவது சீசன், 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும் என்று லீக் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ் இன்று (நவம்பர் 27) நடந்த மெகா ஏலத்தின் தொடக்கத்தில் உறுதிப்படுத்தினார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மற்றும் இந்திய ஆண்கள் டி20 உலகக்கோப்பை காரணமாக, வழக்கமாக பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரானது, இம்முறை குறுகிய காலத்திற்கு முன்பே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மைதானங்கள் 

இரண்டு மைதானங்களில் மட்டுமே போட்டி

கடந்த சீசனில் நான்கு மைதானங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், மகளிர் ஐபிஎல் 2026 தொடரானது குஜராத்தில் உள்ள வதோதரா பிசிஏ மைதானம் மற்றும் நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் மைதானம் ஆகிய இரண்டு மைதானங்களில் மட்டுமே நடத்தப்படவுள்ளது. முந்தையப் போட்டி வடிவமான 'கேரவன் ஃபார்மட்' (caravan format) தொடரும். ஆறாவது அணி சேர்க்கப்படும்போது, சொந்த மற்றும் வெளியூர் மைதான வடிவத்தை (Home and Away Format) கொண்டு வர எதிர்பார்க்கப்படுவதாக டெல்லி கேப்பிடல்ஸ் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் தெரிவித்தார்.

ஏலம்

மெகா ஏலத்தில் அணிகள் பலம்

மெகா ஏலத்தில் அணிகள் தங்கள் பலத்தை மேம்படுத்திக் கொண்டன. அதிகப் பணத்துடன் ஏலத்துக்கு வந்த உபி வாரியர்ஸ், மெக் லானிங், சோஃபி எக்லெஸ்டோன், தீப்தி சர்மா ஆகியோரை வாங்கியது. டெல்லி கேப்பிடல்ஸ் லாரா வோல்வார்ட் உட்பட ஆல்ரவுண்டர்களில் முதலீடு செய்தது. நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், அமெலியா கெர் மற்றும் ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. முதல் ஏலத்திலேயே குஜராத் ஜெயன்ட்ஸ் சோஃபி டிவைனை அதிக விலை கொடுத்து வாங்கியது.

Advertisement