Page Loader
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்; 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் ஆண்டிம் பங்கால்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார் ஆண்டிம் பங்கால்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்; 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் ஆண்டிம் பங்கால்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 22, 2023
11:24 am

செய்தி முன்னோட்டம்

மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் 2023இல் இந்தியாவின் ஆண்டிம் பங்கால் வெண்கலப் பதக்கம் வென்றதோடு, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றுள்ளார். செர்பியாவின் பெல்கிரேடில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் 19 வயதே ஆன ஆண்டிம் பங்கால் 53 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார். வியாழக்கிழமை (செப்டம்பர் 21) நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்ற அவர், ஸ்வீடனின் எம்மா ஜோனா டெனிஸ் மால்ம்கிரெனை தோற்கடித்து பதக்கம் வென்றார். இதன் மூலம், கீதா போகத், பபிதா போகத், பூஜா தண்டா, வினேஷ் போகத் மற்றும் அன்ஷு மாலிக்கிற்கு பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை வென்ற ஆறாவது இந்திய வீராங்கனை ஆனார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

embed

Twitter Post

🇮🇳's Rising Wrestling 🌟, @OlyAntim wins the🥉medal bout at #WorldWrestlingChampionships,🤼‍♀ defeating 2⃣-time European champion in 53kg weight category 🥳 The trail of victory didn't stop there as the #TOPSchemeAthlete also went on to secure an #Paris2024 quota for India in... pic.twitter.com/piRoYUfEMA— SAI Media (@Media_SAI) September 21, 2023