ஒலிம்பிக்சில் தடகள போட்டியில் முதல் பரிசு வெல்பவர்களுக்கு இனி ரொக்க பரிசு தரப்படும்
இனி ஒலிம்பிக் போட்டி தொடரில் தடகள போட்டிகளில், முதல் பரிசு, அதாவது தங்க பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு, உலக தடகள விளையாட்டு அமைப்பு ரொக்க பரிசு அளிக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பரிசுத்தொகையை வழங்கும் முதல் சர்வதேச கூட்டமைப்பாக உலக தடகள விளையாட்டு மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் ஒரு பகுதியாக உள்ள 48 தடகள போட்டிகளில், தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 46,000 யூரோக்கள் வழங்கப்படும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. அதேபோல அதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டிகள், அதாவது, லாஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெல்பவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தடகள சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக்ஸ்-இல் ரொக்க பரிசு
World Athletics to award prize money to Olympic gold medallists for first time Read @ANI Story | https://t.co/1or1A6jb7S#WorldAthletics #Olympics #ParisOlympics2024 pic.twitter.com/yxQiiPgTL6— ANI Digital (@ani_digital) April 10, 2024