அடுத்த செய்திக் கட்டுரை

வீடியோ: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் லக்கேஜ்களை டெம்போவில் குப்பையை போல் ஏற்றி சென்றதால் சர்ச்சை
எழுதியவர்
Sindhuja SM
Apr 25, 2024
07:35 pm
செய்தி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸின் 'ஏ' கிரிக்கெட் அணி, ஏப்ரல் 27-ம் தேதி கிர்திபூரில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக புதன்கிழமை நேபாளம் சென்றடைந்தது.
காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தவுடன், அந்த அணியில் உள்ள வீரக்ளுக்கு அதிர்ச்சிகரமான வரவேற்பு கிடைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் லக்கேஜூகளை எடுத்துச் செல்ல ஒரு டெம்போ வண்டி விமான நிலையத்திற்கு வெளியே அவர்களுக்காகக் காத்திருந்தது.
கிரிக்கெட் வீரர்களுக்காக எந்த ஒரு வசதியும் நேபாளம் செய்து தரவில்லை என்று கிரிக்கெட் பிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் லக்கேஜூகள் குப்பையை போல் ஒரு டெம்போ வண்டியில் ஏற்றப்படுவதை வைரலாகும் ஒரு வீடியோ காட்டுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் வீடியோ
The way Nepal welcomed West Indies team. 🤨 pic.twitter.com/8JBKNOu01T
— Nibraz Ramzan (@nibraz88cricket) April 24, 2024