நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் மாற்றம்; வாஷிங்டன் சுந்தர் கூடுதலாக சேர்ப்பு
பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 15 பேர் கொண்ட அணியில் மற்றொரு வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம், நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளவர் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆவார். வலது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இடது கையால் பேட் செய்யும் இவர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட அணியின் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்பிக்கப்பட்ட இந்திய அணி வீரர்கள் பட்டியல்
இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை (அக்டோபர் 24) புனேவில் தொடங்க உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 1 அன்று தொடங்க உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக உள்நாட்டில் டெஸ்டில் 36 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி தோற்றாலும், எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணி: ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர்.