LOADING...
ஐபிஎல் 2026: கே.எல்.ராகுலை வீழ்த்திய விராட் கோலியின் மின்னல் வேக கேட்ச்; வைரல் வீடியோ
கே.எல்.ராகுலை வீழ்த்திய விராட் கோலியின் மின்னல் வேக கேட்ச்

ஐபிஎல் 2026: கே.எல்.ராகுலை வீழ்த்திய விராட் கோலியின் மின்னல் வேக கேட்ச்; வைரல் வீடியோ

எழுதியவர் Sekar Chinnappan
Apr 18, 2026
08:02 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதின. இந்தப் போட்டியில், பேட்டிங் செய்யும்போது கே.எல்.ராகுல் டெல்லி அணியின் வெற்றிக்காகத் தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்த நிலையில், விராட் கோலி தனது அற்புதமான பீல்டிங் மூலம் ஆட்டத்தின் போக்கை மாற்றிய விதம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. போட்டியில் ராகுல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த நிலையில், கோலி பிடித்த அந்த கேட்ச் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் போராட்டம்

ஆட்டத்தின் சூழலும் ராகுலின் போராட்டம்

176 ரன்கள் என்ற இலக்கை நோக்கிப் பயணித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ஆரம்பத்திலேயே பதும் நிசாங்கா உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளை இழந்து 18 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. புவனேஸ்வர் குமாரின் துல்லியமான பந்துவீச்சு டெல்லி அணியின் டாப் ஆர்டரைச் சரித்தது. இக்கட்டான சூழலில் களமிறங்கிய கே.எல்.ராகுல், அதிரடியான ஷாட்களை வெளிப்படுத்தி டெல்லி அணியை மீட்கப் போராடினார். 34 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த ராகுல், 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாக இருந்தார்.

விராட் கோலி

கோலியின் மின்னல் வேக பீல்டிங்

கே.எல்.ராகுல் மற்றும் டெல்லி அணியினர் வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தருணத்தில், ஆர்சிபி அணியின் கேப்டன் மற்றும் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் இருந்தனர். அப்போது, க்ருனால் பாண்டியா வீசிய பந்தை ராகுல் தூக்கியடித்தபோது, லாங்-ஆஃப் எல்லையில் நின்றிருந்த விராட் கோலி, மிகுந்த கவனத்துடனும் வேகத்துடனும் ஓடிச் சென்று அந்த கடினமான கேட்ச்சைச் சரியாகப் பிடித்தார். ஒரு பேட்ஸ்மேன் இவ்வளவு அபாயகரமாக இருக்கும்போது, விராட் கோலி தனது பீல்டிங் திறமையால் ராகுலை வெளியேற்றியது, ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது. எனினும் இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement