சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து; சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் புதிய சாதனை படைத்தார் விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
துபாயில் நியூசிலாந்திற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் 550 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அனைத்து வடிவங்களிலும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 664 போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கரை விட இப்போது அவர் 114 போட்டிகள் பின்தங்கியுள்ளார்.
550 போட்டிகளில், ஒருநாள் கிரிக்கெட்டில் 302, டெஸ்ட் கிரிக்கெட்டில் 123 மற்றும் டி20 கிரிக்கெட்டில் 125 போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.
இந்த பட்டியலில் எம்எஸ் தோனி (538) மற்றும் ராகுல் டிராவிட் (509), ரோஹித் ஷர்மா (499*) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி
தொடர்ச்சியாக 3 சாம்பியன்ஸ் டிராபி
இந்த சாம்பியன்ஸ் டிராபி விராட் கோலி தொடர்ச்சியாக பங்கேற்கும் மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபியாகும்.
முன்னதாக, 2013, 2017 ஆகிய இரண்டு சாம்பியன்ஸ் டிராபியிலும் பங்கேற்றுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், இந்த மூன்று சாம்பியன்ஸ் டிராபிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி சிறப்பான ஃபார்மில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு சதம் உட்பட நான்கு போட்டிகளில் 217 ரன்கள் எடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 58.11 சராசரியில் 14,180 ரன்கள் குவித்து, 51 சதங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
தி ஐசிசி ரிவியூவில் பேசிய முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கோலியின் தகவமைப்புத் திறன் மற்றும் ஒழுக்கத்தைப் பாராட்டினார்.