
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: 23 ஆண்டு சோகத்தை முடிவுக்கு கொண்டுவருவாரா விராட் கோலி?!
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்க உள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள விராட் கோலி மீது அனைவரது பார்வையும் உள்ளது.
இந்த போட்டியின் போது கோலி முறியடிக்க வாய்ப்புள்ள சில சாதனைகளைப் பார்ப்போம். ஐசிசி தொடர்களில் நாக்-அவுட் நிலை போட்டிகளில் விராட் கோலி மொத்தம் 620 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 657 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் ரிக்கி பாண்டிங் 731 ரன்களுடன் முதலிடத்திலும் உள்ள நிலையில், இருவரின் சாதனையை விஞ்சி முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
virat kohli can beat more records in wtc final 2023
ஒரு பவுலருக்கு எதிராக அதிக டெஸ்ட் ரன்கள்
தற்போது ஒரு பவுலருக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த சாதனையை, நாதன் லியானுக்கு எதிராக 570 ரன்களுடன் சேதேஷ்வர் புஜாரா வைத்துள்ளார்.
இந்த பட்டியலில் 511 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ள கோலி முதலிடத்திற்கு முன்னேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இங்கிலாந்தில் அதிக சர்வதேச கிரிக்கெட் ரன்களை குவித்த இந்திய வீரராக ராகுல் டிராவிட் 2,645 ரன்களுடன் உள்ளார்.
2,574 ரன்களை வைத்துள்ள கோலி இந்த போட்டியில் அதை முறியடிப்பார் என நம்பலாம். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2000இன் இறுதிப்போட்டியில் கங்குலி இந்தியாவுக்காக சதம் அடித்தார்.
அதன்பிறகு, ஐசிசி தொடர்களில் எந்தவொரு இறுதிப் போட்டியிலும் இந்தியர் சதமடிக்காத நிலையில், கோலி 23 ஆண்டு கால சோகத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.