Page Loader
"கோலி களத்தில் தான் அப்படி.. ஆனால் உண்மையில்.." : மனம் நெகிழ்ந்த தினேஷ் கார்த்திக்
கோலி களத்திற்கு வெளியே மிகவும் அன்பானவர் : மனம் நெகிழ்ந்த தினேஷ் கார்த்திக்

"கோலி களத்தில் தான் அப்படி.. ஆனால் உண்மையில்.." : மனம் நெகிழ்ந்த தினேஷ் கார்த்திக்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 03, 2023
11:04 am

செய்தி முன்னோட்டம்

களத்தில் விராட் கோலி ஒரு ஆக்ரோஷமான வீரராக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவர் மிகவும் அன்பானவர் மற்றும் அனைவரையும் அக்கறையோடு பார்த்துக்கொள்வார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். தினேஷ் கார்த்திக் கோலிக்கு முன்பே சர்வதேச அரங்கில் அறிமுகமானாலும், ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியில் தான் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில், ஆர்சிபி போட்காஸ்டில் பேசிய கார்த்திக், கோலியுடன் தனக்கு மிக நல்ல உறவு இருப்பதாக தெரிவித்ததோடு, கோலி களத்திற்கு வெளியே எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய, மற்றும் அனைவரிடமும் அன்பு செலுத்தக் கூடிய நபர் எனக் கூறினார். மேலும் கோலியின் அதிரடி பேட்டிங் குறித்து பலர் சிலாகித்தாலும், அவர் நிலைத்து நின்று ரன் சேர்ப்பதில் வல்லவர் எனவும் தினேஷ் அப்போது கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

ஆர்சிபி ட்வீட்