CT 2025: ஃபீல்டிங்கில் இந்திய ஜாம்பவான் முகமது அசாருதீன் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி ஃபீல்டிங்கில் புதிய சாதனை படைத்தார்.
விராட் கோலி இந்த போட்டியில் இரண்டு முக்கியமான கேட்சுகளை எடுத்து, வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் ஜேக்கர் அலியை அவுட் செய்தார்.
இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 156வது கேட்சு மூலம், இந்திய அவுட்ஃபீல்ட் வீரரின் அதிக கேட்சுகள் பிடித்த முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சாதனையை கோலி சமன் செய்தார்.
இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (140 கேட்சுகள்), ராகுல் டிராவிட் (124), சுரேஷ் ரெய்னா (102) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
போட்டி நிலவரம்
இந்தியா vs வங்கதேசம் போட்டி நிலவரம்
வங்கதேச கிரிக்கெட் அணி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கியது.
ஆனால், இந்திய கிரிக்கெட் அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும், ஹர்ஷத் ராணா மூன்று விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 229 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, இதை எழுதும் நேரத்தில் 112/2 என ஆடி வருகிறது.
ரோஹித் ஷர்மா 41 ரன்களிலும், விராட் கோலி 22 ரன்களிலும் அவுட் ஆன நிலையில் ஷுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் ஆடி வருகின்றனர்.