கால்பந்து வீரரை கிரிக்கெட் ஆட வைத்தால் இது தான் நடக்கும்! வைரலாகும் வீடியோ!
கிரிக்கெட் பேட்ஸ்மேன் அடித்த பந்து ஒன்று பவுண்டரி எல்லையைத் தாண்டி பறந்து சென்ற நிலையில், ஃபில்டர் ஒருவர் அதை அட்டகாசமாக பைசைக்கிள் கிக் மூலம் தடுத்து அவுட்டாக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் எப்போதும் சுவாரஸ்யங்களை பஞ்சம் இருக்காது. பெரும்பாலான சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு கூட தெரியாத நுட்பங்களை இங்கு பார்க்க முடியும். அந்தவகையில் சமீபத்திய உள்ளூர் போட்டி ஒன்றில், அனைவரும் வியக்கத்தக்க வகையில் கால்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படும் பைசைக்கிள் கிக் மூலம் சிக்ஸரை தடுத்த ஒரு சம்பவம் நடந்தது. பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இதை ட்விட்டரில் பகிர, வீடியோ தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
சச்சின் ட்வீட்
பிரபல கிரிக்கெட் வீரர்களின் ரியாக்ஷன்
வீடியோவில், பவுண்டரி லைனுக்கு மேல் பறந்து போன பந்து சிக்ஸர் தான் என அனைவரும் நினைத்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஒருவர், தனது காலால் பந்தை தடுத்து மீண்டும் சிக்ஸராக ஆகாமல் தடுத்துள்ளதை காண முடிகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், ஃபீல்டர் சிக்ஸரை தடுத்தது மட்டுமல்லாமல், பந்தை உள்ளே இருந்த மற்றொரு ஃபீல்டருக்கு கேட்ச் கொடுத்து பேட்டர் ஆட்டமிழந்ததும்தான். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த வீடியோவை பகிர்ந்து, "கால்பந்து விளையாடத் தெரிந்த ஒரு பையனை அழைத்து வரும்போது இதுதான் நடக்கும்!!" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தவிர இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீஷம் உள்ளிட்ட பலரும் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.