Page Loader
சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பி திருமாறன்!
சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பி திருமாறன்

சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பி திருமாறன்!

எழுதியவர் Sekar Chinnappan
May 29, 2023
03:04 pm

செய்தி முன்னோட்டம்

கிரீஸ் நாட்டில் நடந்து வரும் வெனிசிலியா-சானியா 2023 சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் செல்வ பி திருமாறன் தங்கம் வென்றார். ஞாயிற்றுக்கிழமை (மே 28) நடந்த போட்டியில் மும்முறை தாண்டுதல் விளையாட்டில் பங்கேற்ற செல்வ பி திருமாறன் 16.78 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்தார். ஒவ்வொரு வீரருக்கும் மொத்தம் ஆறு வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் தனது இரண்டாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 16.78 மீட்டர் தாண்டி முதலிடத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியா அளவிலான ஜூனியர் மும்முறை தாண்டுதல் தேசிய சாதனையையும் முறியடித்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர் மதுரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post