LOADING...
தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வேதா கிருஷ்ணமூர்த்தி அறிவிப்பு
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வேதா கிருஷ்ணமூர்த்தி அறிவிப்பு

தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வேதா கிருஷ்ணமூர்த்தி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 25, 2025
07:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி வெள்ளிக்கிழமை (ஜூலை 25) தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் பிறந்த 32 வயதான கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி தனது சமூக ஊடகங்களில் ஒரு உணர்ச்சிபூர்வமான குறிப்பைப் பகிர்ந்து ஓய்வை அறிவித்துள்ளார். தனது கிரிக்கெட் பயணம் முழுவதும் தன்னுடன் நின்ற அணி வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அதில் நன்றி தெரிவித்தார். கடூர் என்ற சிறிய நகரத்திலிருந்து உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனது பயணத்தை வேதா தனது இதயப்பூர்வமான செய்தியில் பிரதிபலித்தார்.

புள்ளி விபரங்கள்

வேதா கிருஷ்ணமூர்த்தியின் புள்ளி விபரங்கள்

வேதா கிருஷ்ணமூர்த்தி தனது 18 வயதில் இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார், தனது முதல் ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் எடுத்தார். தனது ஆக்ரோஷமான பேட்டிங் பாணிக்கு பெயர் பெற்ற இவர், 2017 மகளிர் உலகக் கோப்பையின் போது இந்தியாவின் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். 2011 முதல் 2020 வரையிலான அவரது 11 ஆண்டு சர்வதேச வாழ்க்கையில், 48 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 76 டி20 சர்வதேச போட்டிகள் உட்பட 124 போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி உள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 829 ரன்களும், டி20 போட்டிகளில் 875 ரன்களும் எடுத்தார்.