Page Loader
மகளிர் டி20 உலகக்கோப்பை : அரையிறுதிக்கு முன் இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!
மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் பூஜா வஸ்த்ரகர் விலகல், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பங்கேற்பதிலும் சிக்கல்

மகளிர் டி20 உலகக்கோப்பை : அரையிறுதிக்கு முன் இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 23, 2023
02:55 pm

செய்தி முன்னோட்டம்

வியாழன் (பிப்ரவரி 23) மாலை கேப்டவுனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதி மோதலுக்கு முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்த்ரகர் அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். ஐசிசி அறிக்கையின் படி, சுவாசக்குழாய் தொற்று காரணமாக பூஜா நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குழு நிலையில் நடந்த அனைத்து போட்டிகளிலும் விளையாடியுள்ள பூஜா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பூஜாவுக்கு பதிலாக ஸ்நே ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் உடல்நிலைக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அணியில் பங்கேற்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. அவர் பங்கேற்பது குறித்து பிசிசிஐ மருத்துவக்குழு விரைவில் முடிவு செய்ய உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

பூஜா வஸ்த்ரகர் நீக்கம்