Page Loader
ஐபிஎல்லிலிருந்து ஜெயதேவ் உனட்கட் நீக்கம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா?
ஐபிஎல்லிலிருந்து ஜெயதேவ் உனட்கட் நீக்கம்

ஐபிஎல்லிலிருந்து ஜெயதேவ் உனட்கட் நீக்கம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா?

எழுதியவர் Sekar Chinnappan
May 03, 2023
01:26 pm

செய்தி முன்னோட்டம்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) வலைகளில் பயிற்சியின் போது ஏற்பட்ட இடது தோள்பட்டை காயம் காரணமாக, ஐபிஎல் 2023 இன் எஞ்சிய போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனினும் ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அவர் சரியான நேரத்தில் உடல் தகுதியுடன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே திங்கட்கிழமை (மே 1) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயமடைந்து நிலையில், அவருக்கும் ஸ்கேன் செய்யப்பட்டு முடிவுகளுக்காக அணி நிர்வாகம் காத்திருக்கிறது. அவரும் ஐபிஎல்லிலிருந்து விலக்கப்படுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post