Page Loader
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் ஆனார் டிராவிஸ் ஹெட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் ஆனார் டிராவிஸ் ஹெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் ஆனார் டிராவிஸ் ஹெட்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 08, 2023
01:13 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார். மேலும் இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார். முன்னதாக முதல் நாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 76 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி அணியை மீட்டனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 327/3 என்ற நிலையில் வலுவாக உள்ளது.

travis head in wtc 2021-23 cycle

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 சுழற்சியில் டிராவிஸ் ஹெட் செயல்திறன்

தற்போது நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் டிராவிஸ் ஹெட் 1,300 ரன்களை கடந்துள்ளார். இந்த எண்ணிக்கையில் நான்கு சதங்கள் மற்றும் ஆறு அரைசதங்கள் அடங்கும். 1,000 ரன்களுக்கு மேல் குவித்த நான்கு ஆஸ்திரேலிய பேட்டர்களில் இவரும் ஒருவர் ஆவார். இதில் குறிப்பாக 2022 இல் மட்டும் டிராவிஸ் ஹெட் 2 சதங்கள், 3அரைசதங்கள் உட்பட 655 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். டிராவிஸ் ஹெட் இதற்கு முன்பு இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்தபோது, இந்த ஐந்து டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது சதம் ஆஸ்திரேலியாவுக்கு இந்த டெஸ்டிலும் வெற்றியைத் தேடித்தருமா என்ற சுவாரஷ்யமான கேள்வி எழுந்துள்ளது.