2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக டாம் லாதம் நியமனம்
செய்தி முன்னோட்டம்
டாம் லாதம் அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் டி20 தொடரிலும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக உள்ளார்.
இதன் மூலம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாட உள்ளதால், 2021 வங்கதேச தொடருக்கு பிறகு மீண்டும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக உள்ளார்.
நியூசிலாந்து இலங்கையுடன் ஏப்ரல் முதல் வாரத்தில் 3 போட்டிகளிலும், பாகிஸ்தானுக்கு எதிராக ஏப்ரல் 14-24 வரை ஐந்து டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
நியூசிலாந்து டி20 அணி வீரர்களின் பட்டியல்
Tom Latham will return to international T20 action for the first time since 2021 to lead the BLACKCAPS T20 sides against Sri Lanka (home) and Pakistan (away). More | https://t.co/jzxlGum5JK #NZvSL #PAKvNZ pic.twitter.com/DNd31LkdKe
— BLACKCAPS (@BLACKCAPS) March 26, 2023