டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்கள்; பட்டியலில் எத்தனை இந்தியர்களுக்கு இடம்?
செய்தி முன்னோட்டம்
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பந்துகளை மைதானத்திற்கு வெளியே பறக்கவிடுவதில் சில வீரர்கள் தனி முத்திரை பதித்துள்ளனர். அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் போன இந்த வீரர்கள், ரசிகர்களுக்கு விருந்து படைப்பதோடு தங்கள் அணிக்காகப் பல சாதனைகளையும் படைத்துள்ளனர். 2026 டி20 உலகக்கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில், ஒட்டுமொத்த உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.
இந்திய வீரர்கள்
இந்திய வீரர்களின் ஆதிக்கம்
அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். அவர் 31 இன்னிங்ஸ்களில் 63 சிக்ஸர்கள் அடித்துள்ளார் இந்தியாவைப் பொறுத்தவரை, ரோஹித் ஷர்மா உலகளவில் இரண்டாம் இடத்தில் இருப்பது நமக்குப் பெருமை சேர்க்கிறது. விராட் கோலி ஐந்தாவது இடத்தில் உள்ள நிலையில், ஒரு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் (2007) ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த யுவராஜ் சிங், இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாகவோ அல்லது அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாகவோ உள்ளனர்.
பட்டியல்
அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்கள் பட்டியல்
கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்): 63 சிக்ஸர்கள் (31 இன்னிங்ஸ்) ரோஹித் ஷர்மா (இந்தியா): 50 சிக்ஸர்கள் (44 இன்னிங்ஸ்) ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து): 43 சிக்ஸர்கள் (34 இன்னிங்ஸ்) டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா): 40 சிக்ஸர்கள் (41 இன்னிங்ஸ்) விராட் கோலி (இந்தியா): 35 சிக்ஸர்கள் (33 இன்னிங்ஸ்) யுவராஜ் சிங் (இந்தியா): 33 சிக்ஸர்கள் (28 இன்னிங்ஸ்) ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா): 31 சிக்ஸர்கள் (22 இன்னிங்ஸ்) கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா): 30 சிக்ஸர்கள் (27 இன்னிங்ஸ்) ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா): 30 சிக்ஸர்கள் (29 இன்னிங்ஸ்) ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்): 28 சிக்ஸர்கள் (16 இன்னிங்ஸ்)