சையத் மோடி இன்டர்நேஷனல் 2023 : ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த், பிரியன்ஷு ரஜாவத் காலிறுதிக்கு முன்னேற்றம்
சையத் மோடி இன்டர்நேஷனல் 2023ல் இந்தியாவின் மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் காலிறுதிக்கு முன்னேறினர். இரண்டாவது சுற்றில் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் சக இந்திய வீரர்களான தன்யா நந்தகுமார் மற்றும் ரிதி கவுர் டூரை எதிர்கொண்டு வெறும் 25 நிமிடங்களில் 21-9, 21-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. அடுத்ததாக காலிறுதியில் தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா அல்லது ருதுபர்ணா பாண்டா மற்றும் ஸ்வேதபர்ணா பாண்டா ஆகியோரை எதிர்கொள்ள உள்ளது. இதேபோல் ஆடவர் பிரிவில் பிரியன்ஷு ரஜாவத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சதீஷ் குமார் போட்டியின் நடுவே ஓய்வு பெற்றதையடுத்து, நேரடியாக காலிறுதிக்கு முன்னேறினார்.