Page Loader
நடிகர் சூர்யாவுடன் சந்திப்பு : தமிழில் ட்வீட் வெளியிட்டு அசத்திய சச்சின்!
நடிகர் சூர்யாவுடனான சந்திப்பு குறித்து தமிழில் ட்வீட் வெளியிட்ட சச்சின்

நடிகர் சூர்யாவுடன் சந்திப்பு : தமிழில் ட்வீட் வெளியிட்டு அசத்திய சச்சின்!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 16, 2023
07:15 pm

செய்தி முன்னோட்டம்

வியாழக்கிழமை (பிப்ரவரி 16) சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கருடன் இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். இருவரும் எதற்காக சந்தித்தோம் என்பது குறித்த விவரங்களை சூர்யா வெளியிடவில்லை. எனினும், "மரியாதை & அன்பு!!" என்று டெண்டுல்கரை டேக் செய்து சூர்யா இந்த படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கிடையே, சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது சூர்யா. மனமார்ந்த வாழ்த்துக்கள்." என தமிழில் பதிவிட்டுள்ளார். சச்சின் சில நாட்களுக்கு முன்பு அஸ்வினுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த ட்வீட் வைரலான நிலையில், இந்த ட்வீட்டையும் சச்சின் மற்றும் சூர்யா ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

சச்சின் ட்வீட்