
டி20 கிரிக்கெட் சாதனை: 450 போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் ஆனார் சுனில் நரைன்
செய்தி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூத்த ஆஃப் ஸ்பின்னர் சுனில் நரேன் டி20 கிரிக்கெட்டில் 450 போட்டிகளில் விளையாடிய ஐந்தாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் 2023 சீஸனின் 53வது போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
சுனில் நரைனுக்கு முன் நான்கு வீரர்கள் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் 450 போட்டிகளின் மைல்கல்லை தொட்டுள்ளனர்.
கீரன் பொல்லார்டு 625 போட்டிகளிலும், டுவைன் பிராவோ 558 போட்டிகளிலும், சோயப் மாலிக் 510 போட்டிகளிலும், கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளிலும் விளையாடி சுனில் நரைனை விட முன்னிலையில் உள்ளனர்.
மேலும் ஆண்ட்ரே ரஸ்ஸலும் 447 போட்டிகளுடன் நரைனை நெருங்கும் நிலையில் உள்ளார்.
sunil naraine 3rd leading wicket taker in t20 cricket
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர்
450 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் நரைன் இதுவரை 485 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் டுவைன் பிராவோ 615 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ரஷித் கான் 546 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
மேலும் டி20 கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 200விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 6.04 என்ற சிறந்த எகானமியுடன் சுனில் நரைன் முன்னணியில் உள்ளார்.
சுனில் நரைன் ஐபிஎல்லில் 158 போட்டிகளில் 159 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஒரு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரின் அதிகபட்ச விக்கெட்டுகளாகும்.
60 அல்லது அதற்கு மேற்பட்ட ஐபிஎல் விக்கெட்டுகளைக் கொண்ட பந்துவீச்சாளர்களில் ரஷித்கானுக்கு (6.56) அடுத்தபடியாக 6.74 என்ற சிறந்த எகானாமியையும் சுனில் நரைன் கொண்டுள்ளார்.