ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனைக்கு தயாராகும் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி
சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக செயல்பட உள்ளதா மூலம் சுனில் சேத்ரி புதிய சாதனை படைக்க உள்ளார். சுனில் சேத்ரி 2014இல் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டனாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இதன் மூலம் இந்திய கால்பந்து அணிக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை கேப்டனாக செயல்படும் மூன்றாவது வீரர் என்ற சாதனை படைக்க உள்ளார். இதற்கு முன்னதாக, சைலன் மன்னா 1951 மற்றும் 1954 என இரண்டு முறையும், பாய்சுங் பூட்டியா 2002 மற்றும் 2006 என இரண்டு முறையும் கேப்டனாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி விளையாடும் ஆட்டங்கள்
𝗠𝗔𝗥𝗞 𝗬𝗢𝗨𝗥 𝗗𝗔𝗧𝗘𝗦 ✅🗓️ The Indian men's and women's teams Group Stage fixtures at the #19thAsianGames 🇮🇳 Don't miss any action on the @SonySportsNetwk and @SonyLIV 📺#IndianFootball ⚽ pic.twitter.com/u1JaGPRk2I— Indian Football Team (@IndianFootball) September 18, 2023