Page Loader
நான்காவது முறையாக கின்னஸ் சாதனை படைத்த இந்திய மாரத்தான் வீராங்கனை சுஃபியா சுஃபி கான்

நான்காவது முறையாக கின்னஸ் சாதனை படைத்த இந்திய மாரத்தான் வீராங்கனை சுஃபியா சுஃபி கான்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 24, 2023
05:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய மாரத்தான் வீராங்கனை சுஃபியா சுஃபி கான், நான்காவது கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே மூன்று முறை கின்னஸ் உலக சாதனை படைத்த சுஃபியா ஜனவரி 13, 2023 அன்று 30 மணி நேரம் 34 நிமிடங்களில், ரன் அக்ராஸ் கத்தார் என்ற பெயரிலான 200 கிலோமீட்டர் தூர இலக்கை ஓடி கடந்தார். இந்தியாவிற்கு வெளியே சுஃபியாவின் முதல் நீண்ட தூர ஓட்டம் இதுவாகும். இது கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆவணங்களை சரிப்பார்த்து கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுஃபியா இதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, 2021ஆம் ஆண்டில் தங்க நாற்கர சாலை ஓட்டம் மற்றும் 2022இல் மணாலி-லே ஹிமாலயன் ஓட்டத்திற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

கின்னஸ் சாதனை வென்ற ஸுஃபியா ஸுஃபி பற்றிய தூர்தர்ஷன் பதிவு