Page Loader
இரண்டு வீரர்கள் இரட்டை சதம்! நான்காம் நாள் முடிவில் வலுவான நிலையில் இலங்கை!

இரண்டு வீரர்கள் இரட்டை சதம்! நான்காம் நாள் முடிவில் வலுவான நிலையில் இலங்கை!

எழுதியவர் Sekar Chinnappan
Apr 27, 2023
07:13 pm

செய்தி முன்னோட்டம்

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவாக உள்ளது. முன்னதாக இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 492 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் மற்றும் கர்டிஸ் கேம்பர் இருவரும் சதமடித்ததோடு, பால்பிரின் மற்றும் டக்கர் அரைசதங்களை அடித்தனர். சிறப்பாக பந்து வீசிய இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூரியா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இலங்கை மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 357/1 என முடித்தது. இந்நிலையில் நான்காம் நாளான இன்று (ஏப்ரல் 27) 704/3 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

srilankan cricket players double century

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் இரட்டை சதங்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் நிஷான் மதுஷ்கா 205 ரன்கள் மற்றும் குஷால் மெண்டிஸ் 245 ரன்கள் என இருவரும் இரட்டை சதத்தை பதிவு செய்தனர். இவர்கள் தவிர கேப்டன் திமுத் கருணரத்னே மற்றும் மேத்தியூஸ் இருவரும் சதமடித்தனர். இதன் மூலம் அணி வலுவான நிலைக்கு சென்றதை அடுத்து 704 ரன்களில் டிக்ளேர் செய்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அயர்லாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்த நிலையில் உள்ளது. முன்னதாக, முதல் ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்த அயர்லாந்து இந்த போட்டியை டிரா செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.