NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
    இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 15, 2023
    08:42 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றைய போட்டியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

    மேற்கூறிய இரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டியானது மழையால் ரத்தாக, இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை எளிதாக வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, தொடரை சமன் செய்து முடித்திருக்கிறது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி.

    நேற்றைய போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், 56 பந்துகளில் 100 ரன்களைக் குவித்து பேட்டிங்கில் அசத்த, குல்தீப் யாதவ் 2.5 ஓவர்களில் வெறும் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் அசத்தினார்.

    கிரிக்கெட்

    தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் முகமது ஷமி பங்கேற்பது சந்தேகம்: 

    இந்தியாவின் முக்கியமான மற்றும் முதன்மையான மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுள் ஒருவரான ஷமி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.

    தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் முகமது ஷமியின் உடல்நிலையைப் பொருத்து அவர் போட்டிகளில் பங்கேற்பது முடிவு செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    கடந்த சில காலமாகவே முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார் ஷமி. தற்போது அதன் காரணமாகவே அவரது தென்னாப்பிரிக்க டெஸ்ட் வாய்ப்பு பறிபோகலாம் எனக் கூறப்படுகிறது.

    ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர். ஷமி பங்கேற்பது சந்தேகம் தான் எனினும் இன்னும் அவருக்கு மாற்றான வீரர் அறிவிக்கப்படவில்லை.

    கிரிக்கெட்

    இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்: 

    மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

    இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியே வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது டி20 போட்டியிலும் அந்த அணியே வெற்றி வாகை சூடியிருக்கிறது.

    மேற்கூறிய இரு அணிகளுக்கும் இடையே முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியிருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

    தற்போது அதனைத் தொடர்ந்து டி20 தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது அந்த அணி. இன்னும் ஒரு போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் பட்சத்தில், டி20 தொடரையும் அந்த அணி கைப்பற்றக்கூடும்.

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் போட்டி: 

    ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் தொடங்கியது.

    இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது ஆஸ்திரேலிய அணி. முதல் நாள் முடிவில் 84 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்களைக் குவித்து நல்ல நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலியா.

    ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் இந்தத் தொடருடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் நிலையில், தன்னுடைய அத்தியாயத்தின் இறுதி டெஸ்ட தொடரின் முதல் இன்னிங்ஸிலேயே 164 ரன்களைக் குவித்து அசத்தியிருக்கிறார் அவர்.

    கிரிக்கெட்

    இங்கிலாந்து பெண்கள் அணியுடன் மோதும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி: 

    இங்கிலாந்து பெண்கள் மற்றும் இந்திய பெண்கள் அணிகள் பங்கெடுக்கும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியானது நவி மும்பையில் உள்ள டாக்டர் DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    நான்கு நாட்கள் வரை நடைபெறவிருக்கும் இந்த டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்று முதலில் பேட் செய்து வருகிறது இந்திய பெண்கள் அணி.

    இந்திய பெண்கள் அணியானது முதல் நாள் முடிவில், 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்களைக் குவித்து நல்ல நிலையிலேயே இருக்கிறது.

    இந்தியா வீராங்கணைகளான சதீஷ் சுபா, ஜெமிமா ரோட்ரிகஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா என அனைவருமே தங்கள் பங்கிற்கு 60 மேற்பட்ட ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவியிருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    இந்தியா
    தென்னாப்பிரிக்கா
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    கிரிக்கெட்

    37 ஆண்டுகால சாதனையை சமன் செய்த நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் டிம் சவுத்தி நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    வங்கதேசம் vs நியூசிலாந்து 2வது டெஸ்ட் : முதல் நாளிலேயே 15 விக்கெட்டுகள் அவுட் டெஸ்ட் கிரிக்கெட்
    பிப்ரவரி 2024இல் மகளிர் ஐபிஎல் தொடர்; ஐபிஎல் ஆட்சிமன்ற குழு தலைவர் அருண் துமால் அறிவிப்பு மகளிர் ஐபிஎல்
    டிசம்பர் 8இல் தொடங்குகிறது யு19 ஆசிய கோப்பை; 10ஆம் தேதி இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பை

    இந்தியா

    இந்திய நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம் - வைரலாகும் வீடியோ  குஜராத்
    குஜராத்தில் போலி டோல் பிளாசா அமைத்து வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்த ருசிகர சம்பவம் நடைபெற்றிருக்கிறது குஜராத்
    கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடனமாடி கொண்டாடிய இந்தியர்கள் யுனெஸ்கோ
    UPI பணப் பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்திய ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி

    தென்னாப்பிரிக்கா

    தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கீழே விழுந்து கிடந்த மூவர்ண கொடி: பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் வீடியோ  பிரதமர் மோடி
    'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும் இந்தியா
    நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார் புற்றுநோய்

    ஆஸ்திரேலியா

    இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்: யாரிந்த பிலிப் கிரீன் இந்தியா
    ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து பந்து வீச முடிவு  ஆஷஸ் 2023
    ஒருமணி நேரத்தில் அதிக புஷ்-அப்; கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலியர் டேனியல் ஸ்காலி உடற்பயிற்சி
    ஆஸ்திரேலியா: இந்திய மாணவரை கொடூரமாக தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025